V laidey - 2026

மதுரையில் மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் கடந்த சில மாதங்களாக மசாஜ் சென்டர், ஆயுர்வேதிக் சிகிச்சை மையம், ஸ்பா, ஹெல்த்கேர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக அடுத்தடுத்து புகார்கள் வந்துள்ளது..

இதனையடுத்து அவ்வாறு செயல்படும் மையங்களை தீவிரமாக ஆய்வு செய்து சம்பந்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே காளவாசல் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதாக எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் அந்த பகுதிகளுக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

criam - 2026

அப்போது, கேரளா மற்றும் சென்னையை சேர்ந்த பெண்களை சிலரை அழைத்து வந்து அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இது குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, வெளி மாநிலங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

ALSO READ:  திருவனந்தபுரம் – சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

இதனை தொடர்ந்து அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திக் முருகன்(வயது 27), கேரளாவை சேர்ந்த ஸ்ரீரவன், சென்னையை சேர்ந்த காயத்திரி, நாகேஸ்வரி, ஜோபிதா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்த பணம் வசூல் செய்யும் ஸ்வைப் மிஷின் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுபோல், அதே பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் வைத்து விபசாரம் செய்ததாக அதன் உரிமையாளர்கள் பிரின்ஸ் இம்மானுவேல், கனிமொழி, திவ்யா, சத்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மசாஜ் சென்டரில் வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending