கிரெடிட், டெபிட் அட்டைக் கொண்டு பயணச்சீட்டு பெறும் வசதி!

Published:

govt bus - 2026

டெபிட், கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி மாதந்திர பேருந்து பயணச்சீட்டு பெறும் வசதி மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பொது மக்கள் தங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயணச் சலுகை அட்டை விற்பனை மையங்களில், ஒவ்வொரு மாதமும், ஏறத்தாழ 2 லட்சத்து, 61 ஆயிரம் பயணிகள் நேரிடையாக பணம் கொடுத்து தங்களது பயணச் சலுகை அட்டையினை பெற்றுக் கொள்ளுகிறார்கள்.

பொதுமக்கள் நலன் கருதி, மின்னனு பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கின்ற வகையில், மாநகர் போக்குவரத்துக் கழக வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் செயல்பட்டு வரும் 29 விற்பனை மையங்களிலும் ஸ்வைப்பிங் மெஷின் வாயிலாக பணம் செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில், பயணிகள் தங்களது டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்து விற்பனை மையங்களிலும், பயணச் சலுகை அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img