பள்ளிப் பாடத்திலும் இடம் பிடிக்கிறது கொரோனா!

Published:

coronavirus 1
coronavirus 1

உலக மக்களை நீங்கா துயரத்தி்ல் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்று பற்றிய பாடம் விரைவில் பள்ளிப் பாடத்தில் சேர்க்கப்படவுள்ளது. இதுகுறித்து தமிழகப் பள்ளிக் கல்வியும், மத்தியக் கல்வி வாரியமும் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ள கொரோனா எனும் நோய்த்தொற்று இதுவரை மனித சமுதாயம் கண்டிராத கொடுமையாகும். இதற்காக கொரோனாவை எல்லோரும் கொரோனா கொடூரன் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டனர்.

உலகில் 300-க்கும் மேற்பட்ட நாடுகளில் 40 லட்சம் பேரை பீடித்துள்ள இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2.67 லட்சம் பேர் இறந்துள்ளனர். உலகப் போரில் கூட இவ்வளவு பேர் இறந்ததில்லை. மேலும் கொரோனாவையும் இந்த சமூகத்தையும் பிரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

இதேபோல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலும், பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கும் இனி கொரோனா கல்வி உதவும் என்றே எதிர்பார்க்கலாம்.

கொரோனாவுடன்தான் இனி வாழ வேண்டும் என்பதால், அதன் தாக்கம் குறித்து எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக் கழகம் வரை அனைத்துப் பாடத் திட்டத்திலும் இந்த ஆண்டே சேர்ப்பதற்கு கல்வியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தமிழகத்தைப் பொறுத்தவரை, பள்ளி்க் கல்வித் திட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்திலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை அறிவியல் பாடத்திலும் கொரோனா வைரஸ் பற்றிய பாடம் இடம் பெறவுள்ளது.

corona kolam
corona kolam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், கொரோனா வைரஸ் பாடம் இடம் பெறும். நுண் உயிரியல்,ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பதப்படுத்துதல், நுண் வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், கொரோனா பாடங்கள் இணைக்கப்பட உள்ளன.

கொரோனா வைரஸின் தொடக்கம், அதன் வடிவம், அதில் இடம்பெற்றுள்ள புரத செல்களின் தன்மை, மிருகங்களிடம் பரவிய வைரஸ், மனிதனுக்கு பரவிய முறை, அதனால் ஏற்படும் பாதிப்பு போன்ற அம்சங்கள், பாடங்களில் இடம்பெறும். இதற்காக, உயிரியல் பிரிவு ஆசிரியர்கள், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களைத் திரட்டி வருவதாக, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலும், பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கும் இனி கொரோனா கல்வி உதவும் என்றே எதிர்பார்க்கலாம்.

  • சதானந்தன், சென்னை
ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img