முக கவசம், சமூக இடைவெளி… விளக்கு பூஜை நடத்திய கிராமத்தினர்!

அடடே... அப்படியா? ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
vilakku-pooja
vilakku-pooja

மூகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி யோடு
118 வது ஆண்டு நவராத்திரி திருவிழாவில்
விளக்கு பூஜை நடத்திய கிராம மக்கள்

மதுரை : கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சில தளர்வுகளுடன் வழிபாட்டுத்தலங்கள்  திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நெறிமுறைகளைப் பின்பற்றி மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமத்தில் அருள்மிகு கபாலீஸ்வரி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சியாக மாபெரும் விளக்கு பூஜை நடைபெற்றது

ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்கு அருகில் இருக்கக்கூடிய திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த விளக்கு பூஜை

இந்த ஆண்டு தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் இருந்த நிலையில் இந்த விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்

இந்த விளக்குப் பூஜையை கிராமத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து நடத்திய முகநூல் நண்பர்கள் குழு முன்னதாக

விளக்கு பூஜைக்கு தேவைப்படக்கூடிய அனைத்து பொருட்களையும் முன்னதாக அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்கினர்

ambal-madurai
ambal-madurai

அதேபோன்று விளக்குப் பூஜையில் கலந்து கொள்ளக்கூடிய அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது

பெண்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இருந்தவாறே விளக்கை ஏற்றி பூஜை செய்து வணங்கினர்

அதேபோன்று முகக் கவசங்கள் அணிந்த வாழும் பெண்கள் அமர்ந்து பூஜை செய்தது காண்போரை வியப்படையச் செய்தது

100 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வரும் இந்த கோவில் திருவிழாவில் முதல் முறையாக பக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இருந்தவாறு விளக்கு பூஜையில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

பூஜைக்கு பிறகு ஒவ்வொருவரும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு பிரசாதமாகப் பெற்றுச் சென்றனர்

ambal-madurai2
ambal-madurai2

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன

ஊசி முனையில் இருந்து வேல் வாங்குதல் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

பொதுவாக முகநூல் என்றாலே வெறும் கேளிக்கை களுக்கும் வதந்திகளுக்கு மட்டுமே இருந்து வரக்கூடிய இன்றைய காலகட்டத்தில் முகநூல் நண்பர்கள் ஒன்றிணைந்து சமூக இடைவெளி யோடு முகக் கவசங்கள் அணிந்தவாறு 

பாரம்பரியமாக நடைபெறும் திருவிழாவும் நின்று விடாத வண்ணம் தமிழக அரசின் வழிகாட்டு முறைகளோடு நடைபெற்ற இந்த விளக்கு பூஜை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.