சீன் ஒன்..உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி போட ஆசை..ஆனா இந்த மண்டபம் சுத்த சைவம்..
சீன் டூ..ஜனவரி ஏழாம் தேதி மதுரையில் ஆயிரம் ரசிகர்களுக்கு ஆட்டுக்கறி விருந்து என ஒரு ஏற்பாடு…

சீன் த்ரீ..ஜனவரி ஐந்தாம் தேதி அதாவது இன்று.. ஆட்டுக்கறி விருந்து வைக்கக்கூடாது என்று பீட்டா அமைப்பு சிஸ்டம் எஞ்சினியருக்கு கடிதம்..

சீன்..ஃபோர்…  மதுரையில் விருந்து நடக்கும்..ஆனா கிடா வெட்டு நடக்காது..ரசிகர் மன்றமும் இன்றே அறிவிப்பு..

சைவ உணவை விரும்பி, விருந்தை மாற்றினதற்கு மனமார பாராட்டத்தோணுது..

ஆனால் அதே நேரத்தில், மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டுக்காக பீட்டா அமைப்பை எதிர்த்து 

ஒட்டுமொத்த தமிழகமே போராடியதும் அதே மதுரை மாவட்டத்தில்தான் தற்போது பீட்டா கடிதத்திற்காக , சர்வசாதாரணமாய் கிடா விருந்தே தவிர்க்கப்படுகிறது என்றால்..

கடைசிவரைக்கும் வெறுஞ்சோறுதானா?

கருத்து: ஊடகவியலாளர் ஏழுமலை வேங்கடேசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending