மணமேடையில் தூங்கும் மணமகன்! வைரல்!

Published:

marriage 1 - 2026

திருமணம் பல மாதங்கள் திட்டமிட்டு, அதை தங்கள் வாழ்வின் மறக்காத தருணமாக மாற்ற மணமக்கள் பாடுபடுவார்கள்.

ஆனால் மாதக்கணக்காக பட்ட சிரமங்களும், பல ஆண்டுக்களாக கண்ட கனவுகளும் நிறைவேறிக் கொண்டிருக்கும் நேரத்தில் மணமேடையில் தூக்கம் வந்தால் என்னவாகும்?

சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோவில், மணமகன் திருமண மேடையில் தூங்குகிறார். அருகில் உள்ள மணமகள் வருத்தத்துடனும் சோகமாகவும் கோபமாகவும் காணப்படுகிறார். இதற்கு கூட கோபம் வராவிட்டால் எப்படி?

பாவம் கொஞ்சம் நேரம் மணமேடையில் தூங்கிய மணமகனின் நிலைமை என்னவாகிறதோ என்று சமூக ஊடகங்களில் பலர் கிண்டல் செய்திருந்தாலும், இதில் ஆழமான உணர்வு பிணைப்புகள் இருக்கின்றன.

காலை நேரத்தில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், இன்னும் சற்று நேரம் உறங்க மனம் ஏங்கும். கடுமையான வேலைகளுக்கு நடுவில் மதியத்தில் உணவு உண்ட பிறகு கொஞ்ச நேரம் தூங்கலாமா என்று மனம் கெஞ்சும். ஆனால் இரவு நேரத்தில் சீக்கிரம் போய் தூங்கு என குடும்பத்தினர் திட்டினாலும் போய் படுப்பதற்கு நேரம் கடத்துவோம்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

ஆனால் திருமண மேடையில் தூங்கிவிடாதே என்று யாராவது இதுவரை அறிவுரை சொல்லியிருப்பார்களா? இந்த வீடியோவை பார்த்த பிறகு, இனிமேல் கட்டாயம் அந்த அறிவுரையை அனைவரும் மணமக்களுக்கு இலவசமாக வழங்குவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

இந்திய திருமணங்கள் வேடிக்கையும், கிண்டலும், கலாட்டாவும் என மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கிடையிலும் மணமேடையில் ஒரு மணமகன் தூங்குகிறார் என்றால் பாவம் அவர் எவ்வளவு சோர்வாக இருந்திருப்பார் என யாரும் அவருக்கு பாவப்பட மாட்டார்கள். அனைவரும் அவரை மேலும் நையாண்டி செய்கிறார்கள்.

இதைப் பார்க்கும் மணமகளுக்கு வருத்தமும் கோபமும் வந்தாலும் அதை காட்டும் இடம் இல்லை என்று பொறுமையாக இருக்கிறார்.

இந்த வைரல் வீடியோவில், மணமகன் திருமண மேடையில் தூங்குவதைக் காணலாம், தூங்கும் மாப்பிள்ளையை அவரது ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுப்ப அனைவரும் முயற்சிக்கிறார்கள்,

ஆனால் மணமகன் அசைந்து கொடுக்கவில்லை. ஏன்? எப்படி என்ற காரணம் சரியாக தெரியவில்லை என்றாலும், மணமகன் குடிபோதையில் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

இந்த வேடிக்கையான திருமண வீடியோவை நிரஞ்சன் மொஹாபத்ரா என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். பலரும் பலவிதமாக முயன்றும் மணமகன் கண்களைக் கூட திறக்கவில்லை.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இந்த வீடியோ இப்போது வைரலாகிறது. மாப்பிள்ளை ஏன் தூங்குகிறார் என்ற காரணத்தை தெரிந்துக் கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

மாப்பிள்ளை, பேச்சுலர் பார்ட்டி கொடுத்து இரவில் விழித்துக் கொண்டிருந்தாரா? அல்லது திருமண வேலைகள் காரணமாக சோர்வாக இருந்தரா? என யாருக்கும் தெரியவில்லை என்றாலும், இந்த மாப்பிள்ளை தற்போது சமூக ஊடகங்களில் எப்ப எந்திரிப்ப மாப்பிள்ளை என்று கிண்டலடிக்கும் அளவுக்கு வைரலாகிவிட்டார்.

கல்யாணத்திற்கு அடுத்த நாள் என்றால் கண் விழிக்காமல் தூங்கினால் புரிந்துக் கொள்ள முடியும். ஆனால் இந்த மாப்பிள்ளை மணமேடையிலேயே தூங்குகிறாரே என்று ஒருவர் கிண்டலடிக்கிறார்.

கிண்டல், நையாண்டி எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், திருமணத்திற்கு முந்தைய இரவில் மணமக்களுக்கு போதுமான தூக்கம் இருக்க வேண்டும் என்பது மட்டும் தெளிவாய் புரிகிறது.

Related articles

Recent articles

spot_img