spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தென்னிந்திய திருச்சபை டிரஸ்ட் சொத்துகளை கபளீகரம் செய்யும் மதுரை ராமநாதபுரம் பேராயம்!

தென்னிந்திய திருச்சபை டிரஸ்ட் சொத்துகளை கபளீகரம் செய்யும் மதுரை ராமநாதபுரம் பேராயம்!

- Advertisement -

CSITA -கம்பெனி சொத்துக்களை மோசடியாக கபளீகரம் செய்து வருகின்றனர் மதுரை இராமநாதபுரம் பேராயம் மேனேஜ்மென்ட் அசோசியேசன் நிர்வாகிகள்.

CSITA -கம்பெனி என சொல்லக்கூடிய தென்னிந்திய திருச்சபை ட்ரஸ்ட் அசோசியேசன் இந்திய கம்பெனிகள் சட்டம் 1956 பிரிவு 25 ன் படி உருவாக்கப்பட்டது இந்த கம்பெனியின் நிர்வாகத்தின் கீழ் 23 திரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மதுரை இராமநாதபுரம் திரு மண்டலம் மதுரை திண்டுக்கல் விருதுநகர் தேனி சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கியது

இந்த திருமண்டலத்தின் கீழ் 9 கல்லூரிகள் 9 உயர்நிலைப்பள்ளிகள் 12 மேல்நிலைப்பள்ளிகள் 3 மெட்ரிக் பள்ளிகள் 21 நடுநிலைப்பள்ளிகள் 135 தொடக்கப்பள்ளிகள் இதுதவிர கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனை என ஏராளமான சொத்துக்கள் உள்ளது கம்பெனி சட்டத்தின் அதிகாரத்திற்குட்பட்ட திருமண்டலத்தின் சொத்துக்களை வாடகை அல்லது ஒத்திக்கு விடவோ யாருக்கும் கிரையம் செய்து கொடுக்கவோ ஒப்பந்தம் போடவோ பத்திரப் பதிவு செய்யவும் தற்போது அதிகாரம் இல்லை .சிஎஸ்ஐ டி ஏ க்கு வரக்கூடிய வெளிநாட்டு நிதி நன்கொடையை எடுத்து கையாளவும் எந்த உரிமையும் கிடையாது

ஆனால் CSITA -கம்பெனியின் பிரிவானது மதுரை இராமநாதபுரம் திரு மண்டலம் என்று மதுரை 162 கீழ வெளி வீதி ஏ வி ஹெச் பில்டிங் முகவரியில் இயங்கி வருகிறது அதே முகவரியில் மதுரை இராமநாதபுரம் பேராயம் மேனேஜ்மென்ட் அசோசியேசன் என்ற பெயரில் சங்க பதிவுகள் சட்டத்தின்படி அங்கீகாரம் இல்லாத தேர்தல்கள் நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் செயற்குழு மற்றும் திருமண்டல உறுப்பினர்கள் மூலமாக பேராயரை தேர்ந்தெடுத்து வருகிறார்கள் .

தேர்தலை நடத்தாமல் கம்பெனிக்கு சட்டத்திற்கு கட்டுப்படாமல் செயல்படும் இந்த அமைப்பு சம்பளம் வாங்கி சபை சம்பந்தப்பட்ட ஊழியம் மட்டுமே செய்ய வேண்டிய பேராயருக்கு வானளாவிய அதிகாரத்தை தாங்களாகவே வழங்கி CSITA -கம்பெனி சொத்துக்களை அவர்கள் இஷ்டத்திற்கு கை மாற்றி வருகின்றனர்.

CSITA -கம்பெனி நிறுவனம் தொண்டு நிறுவனம் என்பதால் இந்திய வருமான வரித்துறை சட்டத்தின்படி வரிவிலக்கு பெற்ற அமைப்பு என்பதால் இந்த நிறுவனத்திற்கு வரும் வெளிநாட்டு நிதிக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது இதனுடைய பான் அட்டை எண் AAATT0642D ஆனால் தன்னிச்சையாக செயல்படக்கூடிய மதுரை இராமநாதபுரம் பேராயம் மேனேஜ்மென்ட் அசோசியேசன் வெளிநாட்டு நிதிகளை தனியாக கையாளுகிற வகையில் AABTT2177Q என்ற எண்ணைக் கொண்ட பான் அட்டையை பயன்படுத்தி வருகின்றனர்

இதன்மூலம் ஏராளமான வெளிநாட்டு நிதிகள் பெறப்பட்டு அவை தனிநபர்களுக்கு சென்றுவிடுகிறது குறிப்பாக இந்த நிதியை மாற்றுத்திறனாளிகளுக்கும் அனாதை குழந்தைகளுக்கும் செலவழித்ததாக கணக்கு காண்பித்து வருகிறார்கள் இந்த நிதியை தணிக்கை செய்தால் மிகப் பெரிய முறைகேடு வெளிச்சத்திற்கு வரும்

CSITA -கம்பெனிக்கு சொந்தமான நிலங்கள் குறித்து எந்த ஒரு ஒப்பந்தமும் பத்திர பதிவு செய்ய பேராயருக்கும் ,மற்ற உறுப்பினர்களுக்கும் அதிகாரம் இல்லை . ஆனால் விதிகளை மீறி இவர்களாக ஒப்பந்தம் தயார் செய்து அதனை 20 ரூபாய் பத்திரத்தில் கம்பெனிக்கு கட்டுப்படாத வகையில் தன்னிச்சையாக தீர்மானங்கள் நிறைவேற்றிCSITA -கம்பெனிக்கு சொந்தமான நிலங்களில் ஏராளமான கடைகளை கட்டி அதில் மாதம்தோறும் கணக்கு காண்பிக்கிற தொகையாக 60 லட்சம் ரூபாய் வரையிலும் கணக்கில் காட்டப்படாமல் பல லட்சம் ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது .

இதிலும் முப்பதாயிரம் ரூபாய் மட்டுமே ரசீது போடப்பட்டு இரண்டு லட்சத்திற்கு மேல் மதிப்பீட்டில் கடைகள் கட்டப்பட்டு இழப்பு ஏற்படுத்தப்படுவதோடு இதற்காக பெறப்படும் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் கணக்கில் காட்டப்படுவதில்லை

இந்த முறைகேடுகளை சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் மட்டும் பதிவு செய்யப்பட்ட மேனேஜ்மெண்ட் அசோசியேசன் என்ற பெயரில் செயல்படும் அமைப்பு பேராயர் ஜோசப் தலைமையில் துணை சேர்மன் யாக்கோபு செயலர்கள் டேவிட் ஜெபராஜ் பெர்னாண்டஸ் ரத்தினராஜ் பொருளாளர் ஜான் மகேந்திரன் பதிவாளர் எட்வின் செல்லையா ஆகிய மண்டல செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி செய்து வருகின்றனர்

இந்திய நாட்டில் ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் ,சிறுபான்மையினர் நலனுக்காகவும் செயல்படவேண்டிய அமைப்பை தனிநபர்களின் சுயநலத்திற்காக சூறையாடுவது எந்த வகையிலும் நியாயமில்லை

*பணி நியமனத்தில் முறைகேடு

*அங்கீகரிக்கப்படாத சிஎஸ்ஐ அமைப்பிற்கு தேர்தல் நடத்துவதிலும் கூட செத்தவர் ஓட்டு போடுகின்ற நிலை உள்ளது

*CSITA -கம்பெனிக்கு சொந்தமான பள்ளிகள் ,மருத்துவமனைகள் ,சர்ச்சுகள் இவற்றின் வளாகங்கள் நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தும் அவை கண்டுகொள்ளப்படாமல் கடைகளை கட்டி பினாமி மற்றும் கருப்பு பண முதலைகளுக்கு கை மாற்றி விட்ட நிலையில் சில பள்ளிகளை நிரந்தரமாக மூடிவிட்டு வணிக வளாகங்களாக மாற்றி விட்டனர் .குறிப்பாக நீதிமன்ற தடையாணை CRP 3739 மற்றும் முந்தைய NCLT உத்தரவுகள் படி புதிய கட்டிடங்கள் கட்டவோ ,பிற நபர்களை சொத்துக்களில் அனுமதிக்க கூடாது .ஆனால் தடைகள் அனைத்தும் மீறப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 14 வணிக வளாகங்களை கட்டி உள்ளனர் .

*CSITA -கம்பெனியில் பணம் போட மட்டுமே முடியும் ஆனால் பணத்தை எடுக்கவோ ,பணத்தை போடாமல் வைத்திருப்பதோ சட்டப்படி குற்றம்

*CSITA -கம்பெனி பணத்தை எடுக்க இயலாத சூழலில் தற்போதைய பேராயர் ஜோசப் தனது காலகட்டத்தில் (2013 -2018 )

7 ஏக்கர் 28 சென்ட் நிலத்தை வாங்கி உள்ளார் .இதனை கம்பெனிக்கு தெரியப்படுத்தி விட்டதாக அவர்கள் கூறினாலும் இதனை வாங்குவதற்கான கம்பெனி பணத்தை கம்பெனியிடம் இருந்து பெறாமல் தன்னிச்சையாக எடுத்து செலவழித்தது குற்றமாகும்

*CSITA -கம்பெனி சொத்துக்களின் சர்வே இடங்களில் தனி நபர் பலர் பதிவு செய்து வைத்துள்ளனர் .அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .அதற்கு பதிலாக ஆக்கிரமிப்பாளர்களிடம் பணம் வாங்கி பங்கு போட்டு கொள்கின்றனர்

*துபாய் ,சிங்கப்பூர் ,இஸ்ரேல் ,இலங்கை என தொடர்ந்து ஆடம்பர சுற்றுலாக்களை மேற்கொள்வதோடு ,பல்வேறு வகைகளில் நோட்டீஸ் அனுப்பி வசூலும் நடைபெறுகிறது

இது சம்பந்தமாக வெளிவந்த நீதிமன்ற உத்தரவில் கூட கம்பெனி தீர்ப்பாயத்தில் இதற்கான முடிவு எட்டப்பட வேண்டும் என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு பேராயர் என்பவர் சபை விஷயங்கள் தொடர்பாக செயல்படக்கூடிய ஊழியர் தான் என்பது மட்டும் உண்மை

மற்ற வகையில் அதிகாரங்களை கையில் எடுக்கவும் பணியில் அமர்த்தக் கூடிய அதிகாரங்களை கையில் எடுக்கவும் அவருக்கு எந்தவித உரிமையும் கம்பெனி சட்டத்தின் படி இல்லை ஆனால் ஊரை ஏமாற்றி உலையில் போடுகிற கதையாக இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தையும் தமிழக அரசையும் ஏமாற்றி வருகின்ற இவர்களின் முறைகேடுகள் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்

CSITA -கம்பெனி நிர்வாகத்தின் கீழ் மதுரை இராமநாதபுரம் திரு மண்டலத்தை நிர்வகிக்க கம்பெனி சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த திருமண்டலத்தின் பயனாளிகள் என்ற என்ற அடிப்படையில் கேட்டுக்கொள்கிறோம் .

  • CSITA -கம்பெனி பிரிவின் பயனாளிகள் கூட்டமைப்பு, மதுரை -ராமநாதபுரம் திருமண்டல பேராயம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe