telugu actor sivaji - 2026

மோடியின் ஆந்திர வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சிவாஜி தண்ணீரில் நின்று கோ பேக் மோடி என்று சொல்லிண்டிருந்தார். இது ஆந்திரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

நரேந்திர மோடி ஆந்திர பிரதேசத்தில் கால் வைத்ததனால் பூமி புனிதம் கெட்டு விட்டது. எனவே அவர் திரும்பிப் போகும் வரையிலும் விமானம் ஏறும் வரையிலும், விஜயவாடாவில் கிருஷ்ணா நதியில் நின்று கொண்டு, ஜல தீட்சையில் ஈடுபடப் போவதாக தெலுங்கு நடிகர் நடிகர் சிவாஜி நீரில் ஊறிக் கொண்டே கூறிக் கொண்டிருந்தார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆந்திரப் பிரதேச குண்டூர் வருகையின் போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சிவாஜி என்பவர் ஒரு போராட்டத்தை நடத்தினார்! விஜயவாடாவில் கிருஷ்ணா நதியில் தண்ணீருக்குள் நனைந்து ஊறியபடி நீர்ப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, பிரதமர் மோடி மீதான தனது படுபயங்கர கோபத்தை வெளிக்காட்டினார்! மோடி ஒரு அரசியல் பயங்கரவாதி என்று தனது குரோதத்தை உமிழ்ந்தார்

நரேந்திர மோடி பாரத பிரதம மந்திரி இல்லை அவர் குஜராத்துக்கான பிரதமர் என்று கருத்து தெரிவித்தார்! மேலும் இந்த நடிகர் தனது அதிருப்தியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மீது வெளிப்படுத்தினார் மேலும் ஜனசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடியின் இந்த பயணத்தின்போது எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்த வில்லை என்றும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending