2014ல் மன்மோகன் சிங்குக்கும் இதையேதான் சொன்னார் முலாயம்!: சுப்ரியா சுலே ‘பகீர்’

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்

supriya sule - 2026

கடந்த 2014ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இப்படித்தான் வாழ்த்து தெரிவித்தார் முலாயம் சிங் யாதவ் என்று கூறியுள்ளார் சுப்ரியா சுலே!

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சுப்ரியா சுலே, இன்று நாடாளுமன்ற மக்களவையில் இந்த நாடாளுமன்றத்தின் கடைசி நாள் என்பதால், மூத்த தலைவரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் பேசிய பேச்சுக்கு பதில் அளித்துள்ளார்.

முலாயம் பேசுகையில், மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சுப்ரியா சுலே இதுகுறித்துக் கருத்து தெரிவிக்கையில், கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவையின் கடைசி நாளிலும் முலாயம் சிங் யாதவ் இப்படித்தான் மன்மோகனுக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறக் கேட்டிருக்கிறேன் என்றார்.

அந்த வகையில் இது ஒரு அலங்கார வார்த்தை என்றும், எல்லோருக்கும் வாழ்த்து தெரிவிப்பது போல், மோடிக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் முலாயம் என்றும் இது ஒரு சாதாரண விசயம்தான் என்றும் சொல்லியிருக்கிறார் சுப்ரியா சுலே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.