a.t.m - 2026
இந்தியர்கள் மட்டுமின்றி உலகில் பல நாடுகளிலிருந்தும் தமிழகத்தின் சுற்றுலாத் தலமான கொடநாட்டிற்கு, சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

அந்த சுற்றுலா பயணிகள் தங்கள் பணத்தேவைக்காக பெரும்பாலும் ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்துகின்றனர்.
கோத்தகிரி-கொடநாடு செல்லும் சாலையில் உள்ள ஈளாடா என்னும் இடத்தில், தேசியமயமாக்கப்பட்ட பல வங்கிகள் மற்றும் அந்த வங்கிகளின் ஏ.டி.எம்.களும் உள்ளன.

நேற்று 2 கல்லூரி மாணவர்கள் ஏ.டி.எம்.-ல் 5000 ரூபாய் எடுத்த பொழுது எரிந்துப்போன மற்றும் கிழிந்துபோன  500 ரூபாய் நோட்டுகள் வெளிவந்துள்ளன.
fire money - 2026அதிர்ச்சியடைந்த மாணவர்கள், வங்கி அதிகாரியிடம் முறையிட்டனர். ஆனால் பணி நேரம் காரணமாக வங்கி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இதனால் பெரும் அவதிக்கு மாணவர்கள் உள்ளானார்கள்.

இது போன்ற எரிந்த மற்றும் கிழிந்துப்போன நோட்டுகள் ஏ.டி.எம்.-ல் பல முறை வந்துள்ளதாகவும், இதனை குறித்து வங்கிகள் சரிவர எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை எனவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

இதனால் கொடநாடு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் பணத்தட்டுப்பாடும்,  அவசர தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் அதனால் மன உலைச்சலுக்கும், அவதிக்கும் உள்ளாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending