“எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்!”
எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்ற பழமொழி உண்டு. இதற்கு நள தமயந்தி வரலாறு மூலம் காஞ்சிப்பெரியவர் விளக்கம் அளித்தார்.
 
மே 21,2015,-தினமலர்.
 
சமஸ்கிருதத்தில் புலமை மிக்க மன்னர் ஹர்ஷர், நளன் வரலாற்றை “நைஷதம்’ என்ற பெயரில் எழுதியுள்ளார். நிஷத நாட்டு மன்னர் என்பதால் “நைஷதம்’ என்று பெயரிடப்பட்டது.
 
நேர்மையும், ஒழுக்கமும் கொண்டவன் நளன். அவன் அழகைக் கேள்விப்பட்ட தமயந்தி நளனைப் பார்க்காமலே காதல் கொண்டாள். ஆனால், இதை அறியாத தமயந்தியின் தந்தை பீமன் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தான். பூலோக அரசர்கள் மட்டுமில்லாமல் தேவர்களும் தமயந்தியின் அழகு கண்டு மயங்கினர். தமயந்தி நளனை விரும்பும் விஷயம் அறிந்த தேவர்கள் தாங்களும் நளன் போல உருமாறினர். சுயம்வர மண்டபத்தில் ஐந்து நளன்கள் அமர்ந்திருந்தனர். மணப்பெண் தமயந்திக்கு சரஸ்வதி தேவி ஒவ்வொரு ராஜகுமாரன் பற்றியும் விளக்கம் அளித்தாள்.
 
அதில் இருந்த காஞ்சிபுரம் மன்னர் பற்றி, “”இவர் காஞ்சியில் கடல் போல பெரிய குளம் உருவாக்கியுள்ளார். ஸ்படிகம் போல தூய நீர்
நிரம்பிய, அந்தக் குளத்தின் அழகை வர்ணிக்க முடியாமல் கவிஞர்களே மவுனமாகி விட்டனர். அதில் இருந்து தெளித்த நீர்த்துளி சந்திரனாக மாறியதோ என எண்ணத் தோன்றும். ஸ்படிக நிறம் கொண்ட யோகேஸ்வரரின் அபிஷேகத்திற்கு இக்குளத்து நீரே பயன்படுகிறது” என்றாள். யோகேஸ்வரர் என இங்கு குறிப்பிட்டது
 
காஞ்சி சங்கர மடத்திலுள்ள சந்திர மவுலீஸ்வர ஸ்படிக லிங்கமே. இதை ஆதிசங்கரர் கைலாயத்தில் சிவனிடம் இருந்து பெற்றார். ஹர்ஷரின் நைஷதத்தில், “யோகேஸ்வர’ என்றே இருக்கிறது. ஆனால், மூல ஸ்லோகத்தைப் பிரதி எடுத்தவர்கள் கவனக்குறைவாக “யாகேஸ்வர’ என்று குறிப்பிட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் தான், “எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்’ என்ற பழமொழி வந்தது.
 
காஞ்சிபுரம் முழுவதிலும் ஆராய்ச்சி செய்தாலும் “யாகேஸ்வரர்’ என்றொரு ஸ்படிகலிங்கம் இருப்பதாக தெரியவில்லை. அதன் பின், நைஷதத்திற்கு உரை எழுதியவர்கள் “யோகேஸ்வர’ என்று மூலத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு தவறைச் சரி செய்தனர்
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...