“கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.”
“ஒரு மஞ்சக் கிழங்கையும் ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு ஓரத்திலே கட்டி விட்டு அப்புறம் உடுத்திக்கோ..”-பெரியவா
(இந்த விஷயங்களெல்லாம் பெரியாவாளுக்கு எப்படி ஸ்புரக்கிறது. அதுதானே நமக்கு ஸ்புரிக்க மாட்டேனென்கிறது!)
தொகுத்தவர்-.கோதண்டராம சர்மா

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
“மாமி,பாருங்கோ!….நான் புதுப்புடவை கட்டிண்டிருக்கேன்,நன்னாயிருக்கோ?….”
குதூகலம் பொங்கக் கேட்டாள் பெண்மணி. அடுத்த வீட்டு அம்மாள் அன்புடன் அருகே வந்து புடவைத் தலைப்பைக் கைகளால் தூக்கிப் பார்த்துத் தடவி கொடுத்து…..
“என்னடி ஜெயந்தி? புதுப் புடவைங்கிறே, கிழிஞ்சிருக்கு…”
ஜெயந்தியும் பார்த்தாள்.கிழிந்து தானிருந்தது.
“அதிசயமா இருக்கே மாமி… நான் கட்டிண்ட போது கிழிசல் இல்லையே?நன்னாப் பார்த்தேனே..”
துக்கம் தாங்காமல் வீட்டுக்கு வந்தாள் ஜெயந்தி. கட்டியிருந்த புதுப் புடவையைக் களைந்தாள் . ஜோடியாகப் புடவை வாங்குகிற வழக்கம். பீரோவில் இருந்த மற்றொரு புதுப் புடவையை உடனே உடுத்திக் கொண்டு போய்,பக்கத்து வீட்டு அம்மாளிடம் காட்டி விடவேண்டும் என்ற உத்வேகம்.
பத்து நிமிஷத்துக்கெல்லாம் அடுத்த வீட்டிலிருந்தாள் ஜெயந்தி.
“மாமி, இது வேறே புடவை.நன்னா உதறிப் பார்த்து கட்டிண்டிருக்கேன்.எப்படி இருக்கு?”
அம்மாள் அருகில் வந்தாள் .”உனக்கென்னடியம்மா!.. எந்தப் புடவை கட்டிண்டாலும் நன்னாத்தான் இருக்கும்!”
புடவைத் தலைப்பை தொட்டுத் தூக்கி….
“என்னடி இது?நெருப்புப் பொறிபட்ட மாதிரி பொத்தல்?..”
ஆமாம்.என்ன இது? கஷ்டமே?…..
பெரியவாளிடம் வந்தாள், ஜெயந்தி.
“நீ என்ன பண்றே…ஒரு மஞ்சக் கிழங்கையும் ஒரு வேப்பிலைக் கொத்தையும் புடவைத் தலைப்பு ஓரத்திலே கட்டிவிட்டு அப்புறம் உடுத்திக்கோ..”
உடுத்திக் கொண்டாள் அப்படியே.
கிழிசலும் இல்லை.பொத்தலும் இல்லை.
இந்த விஷயங்களெல்லாம் பெரியாவாளுக்கு எப்படி ஸ்புரிக்கிறது.
அதுதானே நமக்கு ஸ்புரிக்க மாட்டேனென்கிறது!