அருள் என்றால், வெறும் தூறல் இல்லை, கன (பண) மழைதான்!. சொன்னவர்-வி.கிருஷ்ணமூர்த்தி11054482_924033570960760_4881393388095922503_n தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (ஒரு சிறு பதிவு) ஒருவர் பெரியவாளிடம் சுமார் பன்னிரண்டாயிரம் ரூபாய் சமர்ப்பித்தார். மஹாபெரியவாள், “எனக்கு ஏதுக்கடா பணம்?” என்று சொல்லிவிட்டு,அப்பொழுது சந்தர்ப்பணை சமையற்கட்டில் பணிபுரிந்து வந்த ஒருவரைக் கூப்பிட்டனுப்பி, “உன் பெண்ணுக்குக் கல்யாணம் என்றாய். பணம் வேண்டாமா? இதோ இருக்கு எடுத்துக்கோ!” என்றார்கள். பணம் கொடுத்த அடியாரின் கண் எதிரிலேயே. “மடத்தில் எத்தனையோ சிப்பந்திகள் ..குறைந்த சம்பளத்தில் மனப்பூர்வமாக ..உழைக்கிறார்கள்.அவர்கள் வீட்டில் ..கல்யாணம் கார்த்தி என்றால் பணத்துக்கு ..எங்கே போவார்கள்?” என்றார். அருள் என்றால், வெறும் தூறல் இல்லை, கன (பண) மழைதான்!.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending