“பாலாஜி பஞ்சரத்ன மாலா” வலை உதவி.-Right Mantra Sundar.(நேற்றும் இன்றும்) “எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் வாழ்வில் ஏழுமலையானும், மகா பெரியவாளும் நடத்திய நெகிழவைக்கும் நாடகம்!” (இன்று இரண்டாம் பகுதி-2) திரு இந்திராசௌந்திரராஜன் பொதிகையில் 18-03-2015 காலை 07-15க்கு சொல்லிய அற்புத நிகழ்வு. அவர் சொற்பொழிவு 19-03-2015 இதன் இரண்டாம் பகுதி தொடர்ந்தது.) (நேற்று கட்டுரை தொடருகிறது.) அதற்கு பிறகு காரியங்கள் மள மளவென நடக்க ஆரம்பித்தது. திருமலை தேவஸ்தானத்தின் அவசர கூட்டம் மீண்டும் கூட்டப்பட்டு அனைத்து மேற்படி திட்டம் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. ஒரு பக்கம் கோவிலுக்கு வருவாய்… மறுபக்கம் ஆஸ்தான வித்வான் எம்.எஸ். அவர்களுக்கும் வருவாயை குவிக்க கூடிய திட்டம், மறுப்பக்கம் அன்னமாச்சரியாவின் கீர்த்தனைகளை வெளியே கொண்டு வரும் ஒரு உன்னத முயற்சி என்பதால் அப்போது திருமலை தேவஸ்தானத்தின் சேர்மனாக இருந்த, ராமேசன் என்பவர் இதற்கு உடனடி ஒப்புதலும் கொடுத்தார். ஒரு நாள் காலை, பிரசாத், ராமேசன் மற்றும் திருமலை தேவஸ்தானத்தின் இன்ன பிற உயரதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.எஸ். – சதாசிவம் தம்பதிகளின் வாடகை வீட்டுக்கு சென்றனர். முதலில் சதாசிவம் அவர்கள் அறைக்குள்ளிருந்து வெளியே வந்து அனைவரையும் வரவேற்றார். அவரிடம் தாங்கள் கொண்டுவந்திருந்த ஏழுமலையான் படத்தையும் பிரசாதத்தையும் கொடுத்து, வந்த நோக்கத்தை கூறுகின்றனர். “ஐயா.. நம் பாரம்பரியத்தின் பெருமையையும் கட்டிக்காக்க திருமலை தேவஸ்தானம் எடுத்து வரும் அனைத்து முடிவுகளையும் நீங்கள் அறிவீர்கள். அதன் ஒரு பங்காக தற்போது அன்னமாச்சரியாவின் கீர்த்தனைகளை இசைவடிவத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். முதல் கட்டமாக 5 இசைத்தட்டுக்களை (ஒரு தட்டுக்கு 10 பாடல்கள்) வெளியிட முடிவு செய்திருக்கிறோம். எம்.எஸ். அவர்கள் தான் பாடித் தரவேண்டும்.” சற்று யோசித்த சதாசிவம் அவர்கள், “முதற்கண், இப்படி ஒரு வாய்ப்பை எங்களுக்கு கொடுக்க முன்வததற்கு நன்றி. ஆனால் பிரசாத் அவர்களே, எம்.எஸ். அவர்கள் தனக்கு பாண்டித்யம் உள்ள மொழியில் மட்டுமே பாடவிரும்புவார். தெலுங்கில் இதுவரை அவர் பாடியதில்லை. தியாகராஜரின் சில கீர்த்தனைகளை தெலுங்கில் அவர் பாடியிருந்தாலும் சிறு வயது முதலே அவர் அதை பயிற்சி செய்து வந்துள்ளார். ஆனால் அன்ன்மாச்சாரியாவின் கீர்த்தனைகள் அப்படி இல்லையே… இந்த வயதில் அவருக்கு அதை பயிற்சி செய்து பாடுவது கடினம். ஒவ்வொரு கீர்த்தனைக்கும் ஒரு வாரமாவது அவகாசம் வேண்டும். அப்படி பார்த்தால் நீங்கள் கூறும் 50 பாடல்களை பாடி முடிக்க ஒரு வருடமாவது அவகாசம் தேவைப்படும். இந்த வயதில் அவரை நாம் தொந்தரவு செய்வது சரியாக இருக்காது. எனவே திருமலை தேவஸ்தானத்தின் இந்த அரிய வாய்ப்பை ஏற்றுக்கொள்ளமுடியாமைக்குவருந்துகிறேன்”என்றார்.மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே பிரச்னை வந்து சேர, பிரசாத் மனமுடைந்தார்.அங்கே டேபிளில் இருந்த இவர் கொடுத்த ஏழுமலையான் படத்தை விரக்தியுடன் பார்ப்பதை தவிர அவருக்கு வேறு ஒன்றும் தோன்றவில்லை. அந்த நேரம் தான் எம்.எஸ். அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்தார்.அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். “அடடா… உட்காருங்க… உட்காருங்க…” என்று பதறியபடி கூறிய எம்.எஸ். அங்கே இருந்த ஏழுமலையான் பாடத்தை பார்த்து புன்னகைத்தார். அதற்கு பிறகு நடந்தது உணர்சிக் காவியம். ஏழுமலையான் படத்தை எடுத்து தனது கைகளில் வைத்துக்கொண்டு பார்த்த இசைக்குயில் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் கண்கள் மூடி பிரார்த்தனை செய்தார். கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக பெருகி ஓடியது. தனது தலையை அவனது திருப்பாதத்தில் வைத்து, “ஸ்ரீனிவாசா என்னை ஆசீர்வதிக்க இத்தனை தூரம் வந்தாயோ?” அவர் அப்படி உணர்ச்சி போங்க கூறியதே மீராவின் பாடலை போல இருந்தது. என்ன ஒரு குரல், என்ன ஒரு பக்தி? மெய்சிலிர்த்தது அங்கிருந்த அனைவருக்கும். எம்.எஸ்.ஸின் அந்த செயல் சரணாகதி தத்துவத்தை பரிபூரணமாக அனைவருக்கும் உணர்த்தியது. அந்த குரலுக்குள் தான் எத்தனை சோகம்…? இவருக்கு இப்படி ஒரு நிலையா? ஸ்ரீனிவாசா… என்று அனைவரும் சிந்தித்தபடி இருந்தார்கள். எம்.எஸ்.ஸின் பாடலை கேட்டப்படியே வளர்ந்த பிரசாத்துக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. இருப்பினும் யாரும் பார்த்துவிடக்கூடாதே என்று அடக்கிக்கொண்டு நின்றார். சதாசிவம் தேவஸ்தான நிர்வாகிகள் வந்த நோக்கம் உட்பட நடந்த அனைத்தையும் தனது மனைவியிடம் எடுத்துக் கூறினார். “இது ஆண்டவனாக என்னை தேடி வந்து கொடுக்கும் வாய்ப்பு. இதற்காக எந்த ஒரு சிரமத்தையும் நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். ஏழுமலையானுக்கு சேவை செய்ய கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நான் விடமாட்டேன்” என்றார் உறுதியுடன். அவரது மனவுறுதி கண்டு அனைவருக்கும் சிலிர்த்தது. நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையில், எம்.எஸ். அவர்களுக்கு ஏகப்பட்ட பாடல்களை கொடுத்து அவரை இந்த வயதில் ஒரேயடியாக சிரமப்படுத்தவேண்டாம்… அதற்கு பதில் அன்னாமச்சாரியாவின் கீர்த்தனைகளை கொண்டு முதலில் ஓரிரு தட்டுக்களை வெளியிடலாம்… பாக்கியை வேறு சில மகான்களின் கீர்த்தனைகளை எம்.எஸ். அவர்களுக்கு பரிச்சயமான சமஸ்கிருதத்தில் வெளியிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அன்னமாச்சார்யாவின் கீர்த்தனைகளுடன் கணேச பஞ்சரத்னம், மதுராஷ்டகம், கீத கோவிந்தம், நாம் ராமாயணம், ஹனுமான் சாலீசா, லக்ஷ்மி அஸ்டோத்திரம், வெங்கடேச கரவலம்ப ஸ்தோத்திரம், கோவிந்தாஷ்டகம், கனகதார ஸ்தோத்திரம், துர்கா பஞ்சரத்னம், ரங்கநாத கத்யம், துவாதச ஸ்தோத்திரம், சிவாஷ்டகம் ஆகியவற்றை பாடி பதிவு செய்வது என்று முடிவானது. இதற்கு பிறகு தான் முக்கியமான கட்டமே வந்தது. மேற்படி பாடல்களை பாட இசைக்குயிலுக்கு எவ்வளவு தருவது? இது பற்றியசிந்தனைவந்ததுமேபிரசாத்துக்குபடபடப்புதொற்றிக்கொண்டுவிட்டது.அங்குஅவர்கள்வந்ததன்காரணமேஅதுதான்என்பதால்அனைவருக்கே சற்று படபடப்பாக இருந்தது. “அம்மா… நீங்கள் ஏழுமலையானுக்கு பாட ஒப்புக்கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. மேற்கொண்டு நாம் தொடர்வதற்கு முன்பு, உங்களுக்கு தரவேண்டிய பணத்தை பற்றி பேச….” இவர் சொல்லி முடிப்பதற்குள் இசைக்குயில் குறுக்கிட்டார். “என்னது பணமா? ஏழுமலையானுக்கு நான் செய்யும் சேவைக்கு பணம் பெறுவதா? ஐயோ…கனவிலும் நான் அதை நினைத்துப் பார்த்ததில்லையே? எனக்கும் ஏழுமலையானுக்கு இடையே பணம் என்பதே கூடாது. ஒரு நையா பைசா கூட நான் இதற்கு பெறமாட்டேன்” என்றார் நா தழுதழுத்தபடி. [I]வேண்டியதைத் [I]தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். மகா பெரியவா சொன்னது நினைவுக்கு வந்தது. “இது மிகவும் சென்ஸிட்டிவான விஷயம். பார்த்து பக்குவமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வை. நீ அவர்களுக்கு உதவி செய்யவே இந்த திட்டத்தை தீட்டியிருகிறாய் என்று தெரிந்தால் நிச்சயம் அவர்கள் நிராகரித்துவிடுவார்கள்.” இதற்கே இப்படி என்றால, உதவி செய்யத்தான் இந்த திட்டமே என்றால், நிச்சயம் ஒப்புக்கொள்ளவேமாட்டார்கள். பிரசாத்துக்கு இதயத் துடிப்பு அதிகரித்தது. வியர்வை பெருக்கெடுத்தது. ஏழுமலையான் மீது பாரத்தை போட்டுவிட்டு பிரசாத் ஆரம்பித்தார். “அம்மா.. நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் சேவைக்கும் ஏழுமலையானுக்கும் இடையே நிச்சயம் நாங்கள் வரமாட்டோம். ஆனால் ஒன்றை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். திருமலை தேவஸ்தானம் இதை யாருக்கும் இலவசமாக தரப்போவதில்லை. திருமலையிலும் நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் இந்த இசைத்தட்டுக்களை விற்பதற்கு விரும்புகிறோம். இதன் மூலம் தேவஸ்தானம் மேற்கொள்ளும் பல பணிகளுக்கு போதிய வருவாய் கிடைக்கும். அதில் ஒரு சிறு பகுதியை உங்களுக்கு தரவிரும்புகிறோம். அதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.” “உங்களை போன்ற ஒரு உன்னதமான ஆத்மாவிடம் இருந்து இப்படி ஒரு சேவையை இலவசமாக பெற்றுகொண்டு நாங்கள் பொருளீட்டி பிற்காலத்தில் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நாங்கள் விரும்பவில்லை. மேலும் தேவஸ்தானத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் ஏழுமலையானுக்கு சேவை செய்யும் சேவகனாகவும் நான் அவனுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அவன் ஆலயத்தில் நடைபெறும் ஒவ்வொன்றுக்கும் நான் அவனுக்கு பதில் சொல்லவேண்டும். மேலும் இப்படி தொகுப்பு வெளியிடப்படவேண்டும் என்பது அவன் விருப்பமே அன்றி எங்களுடையது அல்ல. ஆகையால் தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.” “உங்களுக்கு மகன் போன்ற ஸ்தானத்தில் இருந்து நான் சொல்கிறேன். ஏதாவது தவறாக பேசியிருந்தால் என்னை மன்னிக்கவேண்டும்” என்றார். சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லைவெல்லுஞ்சொல் இன்மை அறிந்துஎன்னும் குறளுக்கு எடுத்துக்காட்டாய்அமைந்திருந்தது அவரது தீர்க்கமான வார்த்தைகள். அதை நிராகரிக்க எவராலும் முடியவில்லை. சில நிமிடங்கள் அனைவரும் மெளனமாக உணர்ச்சி பெருக்கோடு இருந்தனர். கடைசியில் எம்.எஸ். அந்த சூழ்நிலையின் இறுக்கத்தை உடைத்தார். “ஏழுமலையான் விருப்பம் அதுதான் எனும்போது நான் என்ன செய்ய… உங்கள் வாய்ப்பை ஏற்றுகொள்கிறேன்” என்றார். பிரசாத் ஏழுமலையான் படத்தை நன்றிப் பெருக்குடன் பார்த்தார். மேலும் சில விவாதத்திற்கு பிறகு அனைத்தும் இறுதி வடிவம் பெற்றது. இப்போது மற்றொரு முக்கிய கட்டம்.ஆல்பத்திற்கு என்ன பெயர் வைப்பது? உடனடியாக இசையரசியிடமிருந்து பதில் வந்தது “பாலாஜி பஞ்சரத்ன மாலா” அடுத்து, எச்.எம்.வி. நிறுவனத்துடன் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துகொண்டது. ஒப்பந்தப்படி உடனடியாக ரூ.4 லட்சம் எம்.எஸ்.அவர்களின் பெயர்லும் ரூ.2 லட்சம் திரு.சதாசிவம் அவர்களின் பெயரிலும், ரூ.1 லட்சம் எம்.எஸ்.-சதாசிவம் தம்பதிகளின் மகள் ராதா விஸ்வநாதன் அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. (அவரும் இந்ததொகுப்பைஉருவாக்கும்முயற்சியில்பங்கெடுத்துக்கொண்டமையால்.)மேற்படி தொகை வைப்புத் தொகையாக (FD) வைக்கப்பட்டு அவர்கள் விரும்பும்வரை அதிலிருந்து கிடைக்கும் வட்டி அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தவறாமல் செல்வது போல ஏற்பாடு செய்யப்பட்டது. பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நெடுனுரி கிருஷ்ணமூர்த்தி கீர்த்தனைகளை வடிவமைத்து .இசையமைத்து தர, 1980 ஆம் ஆண்டு ‘பாலாஜி பஞ்சரத்னா மாலா’ வெளியிடப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் அதை வெளியிட்டார். இரண்டாம் தொகுப்பை திருமதி.இந்திரா காந்தி வெளியிட்டார். அதுவரை இந்திய இசை வரலாற்றில் இருந்த அனைத்து சாதனைகளையும் பாலாஜி பஞ்ச ரத்னா மாலா முறியடித்தது. 1998 ஆம் ஆண்டு எம்.எஸ். அவர்களுக்கு நம் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா தந்து கௌரவிக்கப்பட்டார். ஆனால் அதை பார்க்க சதாசிவம் அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. ஒரு வருடத்துக்கு முன்பு 1997 ஆம் ஆண்டு அவர் அமரரானார். எம்.எஸ். அவர்கள் மட்டும் இல்லையெனில், நமது மகான்களின் பல அற்புதமான கீர்த்தனைகளும் பாடல்களும் பரவாமலேயே போயிருக்கும். கோடிக்கணக்கனோர் இல்லங்களில் நித்தமும் சுப்ரபாதம் பாடி ஏழுமலையானை துயில் எழுப்பிக்கொண்டிருந்த, தனது குரலாலும் இசையாலும் எண்ணற்ற ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் 2004 ஆம் ஆண்டு நம்மை விட்டு பிரிந்து ஏழுமலையான் மலர்ப்பாதத்தை அடைந்தார். செப்டம்பர் 16 எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் பிறந்த நாள். தனக்கு துன்பம் வந்த நிலையிலும் இறைவனிடம் எதையுமே எதிர்பாராமல்,சங்கீதமே தன் மூச்சு என்று வாழ்ந்து வந்த அந்த இசையரசியின் புகழ் காற்றுள்ள வரையில் இந்த பூமியில் நிலைத்திருக்கும்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari