இன்று மாசி மாத மக நட்சத்திர தினம். இந்த நாளில் சிவாலயங்களில் பெரும் சிறப்புடன் புனித நீராட்டல் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதை ஒட்டி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இளைய மகாமக விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அடுத்த வருடம், அதாவது 2016ஆம் ஆண்டு மகா மகம் வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகா மகத்துக்கு முன்னர் வரும் மாசி மகத்தை இளைய மகாமகம் என்பர். அதன்படி, இன்று மாசி மகத்தையொட்டி, சிவாலயங்களில் உள்ள உற்ஸவ மூர்த்திகள் மகாமகக் குளத்துக்குக் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமகக் குளத்தில் புனித நீராடினர். இந்த நிகழ்வை ஒட்டி, மகா மகக் குளத்தை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending