திருச்செந்தூர் முருகன் கோவிலில், இன்று கந்த சஷ்டி விழா தொடங்குவதால், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நாளை அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி, வரும் 13ஆம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு, நள்ளிரவு ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், உதயமார்த்தாண்ட அபிசேகமும் நடைபெறவுள்ளது. அதன்பிறகு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் அதிகாலை 5.30 மணியளவில் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கோவிலில் தங்கி விரதம் இருப்பது வழக்கம் என்பதால், காலையில் இருந்தே பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari