உலக கோப்பை கால்பந்து இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி எது அசிலிஷ் பூனை கணிப்பு சரியாக இருக்குமா?

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் ரஷியா – சவுதி அரேபியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் ரஷியா அணி வெல்லும் என அசிலிஷ் கணித்துள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று ரஷியாவில் தொடங்க உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று அது சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.

இந்த முறை உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள அந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்துள்ளார்.