கபடி மாஸ்டர்ஸ் தொடர்: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

Published:

11 June26 Kabadi - 2026துபாயில் நடைபெற்று வரும் கபடி மாஸ்டர்ஸ் தொடரில் இந்தியா 41 க்கு 17 என்ற புள்ளிக்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்துகொள்ளும் கபடி மாஸ்டர்ஸ் தொடர் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. அறிமுக ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானையும், அடுத்து நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கென்யாவையும் வீழ்த்தியது. இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது தடவையாக நேற்று மோதின. இதில் இந்திய அணி 41 க்கு 17 என்ற புள்ளிக்கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Related articles

Recent articles

spot_img