டிக்கெட் பணம் முழுவதையும் திருப்பி வழங்குகிறது லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்

இங்கிலாந்து – இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று போட்டி தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டது. ஒரு பந்து கூட வீசப்படாததால் முதல் டிக்கெட் வாங்கியவர்களுக்கு, டிக்கெட்டிற்கான முழுத் தொகையையும் வழங்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2001-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய டெஸ்டின்போது மழைக் காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதும் ரத்தானது. அதன்பின் தற்போதுதான் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய 2-வது நாள் ஆட்டமும் மழையினால் தடைபட்டு வருகிறது.