அனுபவமற்ற தேர்வுக் குழுவினரால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோஹ்லிக்கு நெருக்கடி கொடுக்க முடியாது என்று முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மானி கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டிஃபென்ஸ் ஆடுவது முக்கியம். ஆனால் ரிஷப் பண்ட் பெரும்பாலும் டிஃபென்ஸ் ஆடாமல் அடித்து அதிரடியாக ஆடுகிறார். இதை முன்னாள் வீரர்கள் பலரும் ஒரு குறையாக விமர்சித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவசரப்படாமல் நிதானமாக ஆடுவது அவசியம் என்பதை உணர்த்துவதற்காகவே அதை சுட்டிக்காட்டினர்.
அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் டெக்னிக்கும் விமர்சனத்துக்கு உள்ளானது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பைஸ் மூலம் 70க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் கீப்பிங்கின்போது ரிஷப் பண்ட்டின் கால் நகர்வுகளிலும் டெக்னிக்குகளிலும் இன்னும் அவர் மேம்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி அறிவுறுத்தினார்.