உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இளம் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
23 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான சி.கே நாயுடு டிராபி கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற போட்டியில் புதுச்சேரி அணியும், மணிப்பூர் அணியும் மோதின.
இதில் புதுச்சேரி அணியை சேர்ந்த பந்துவீச்சாளர் சிதக் சிங் (19) அபாரமாக பந்துவீசினார்.
இதில் புதுச்சேரி அணியை சேர்ந்த பந்துவீச்சாளர் சிதக் சிங் (19) அபாரமாக பந்துவீசினார். இதன் காரணமாக மணிப்பூர் அணி முதல் இன்னிங்சில் வெறும் 71 ரன்களில் சுருண்டது.