ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கோரிய நளினி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. 7 பேரை விடுவிக்க அமைச்சரவை இயற்றிய தீர்மானத்திற்கு ஆளுநரின் ஒப்புதலை பெற தமிழக அரசுக்கு உத்தரவிட கோரியிருந்தார் நளினி. ஆனால் அரசியல் அமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள தனி அதிகாரத்தில் மாநில அரசு தலையிட முடியாது என தமிழக அரசு வாதிட்டது. இதையடுத்து பேரறிவாளன், சாந்தன்,முருகன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுவிக்க கோரிய நளினி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending