koyambedu

இன்று 27 பேருக்கு கொரோனா உறுதியானதால், கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 119 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் என பலருக்கு கொரோனா பரவியுள்ளது. கோயம்பேட்டில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வகையில் இன்று மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, கோயம்பேடு மூலம் கொரோனா பரவியர்களின் எண்ணிக்கை 119 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் வந்த 3 பேருக்கு நேற்று கொரோனா உறுதியான நிலையில், இன்று மேலும் 17 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், அங்கு 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடலூரில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதியானதால், கோயம்பேடு மூலம் அங்கு 17 பேருக்கு கொரோனா உறுதியானது. அதேபோல், அரியலூரில் மேலும் இரண்டு தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதியானதால், கோயம்பேடு மூலம் அரியலூரில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோயம்பேட்டில் இருந்து அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள பெரியாகுறிச்சி மற்றும் நத்தாகுழி பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா உறுதியானது.இதன் மூலம் கோயம்பேடு சந்தை மூலம் சென்னையில் 52, கடலூரில் 17, அரியலூரில் 22, காஞ்சிபுரத்தில் 7 விழுப்புரத்தில் 20, பெரம்பலூரில் ஒருவர் என 119 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending