நாளை முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம்! நேரக் கட்டுப்பாடு அறிவிப்பு!

தமிழகம் பொது தகவல்கள்
reshon

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் 1,500 கார்டுகளுக்கு மேல் உள்ளது.

அந்த கார்டுகளுக்கு வீடு தேடி சென்று டோக்கன் வழங்கி வருகிறார்கள். இதையொட்டி திங்கட்கிழமை முதல் ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளலாம்.

கடந்த மாதம் ரேசனில் இலவச பொருட்களை வழங்கும்போது காலையில் 75 கார்டுகளுக்கும், மதியம் 75 கார்டுகளுக்கும் பொருட்கள் கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இதே நடைமுறை தான் இந்த மாதமும் கடைப்பிடிக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது காலை 7.30 மணியில் இருந்து 2.30 மணி வரை தான் ரேசனில் பொருட்களை கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் ரேசன் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவ இதுவே காரணமாக இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.