child marriage

சிறுமியை திருமணம் செய்த, இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி, தன், 14 வயது மகளுக்கு, அதேபகுதியைச் சேர்ந்த, மளிகைக் கடை வைத்திருக்கும் வெள்ளைச்சாமி, 23, என்பவருக்கு கடந்த, 24ம் தேதி திருமணம் செய்து வைத்தார்.

இந்த திருமணத்தில் சிறுமிக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலர் ஆரோக்கியமேரி ஜெயாவுக்கு தகவல் கிடைத்தது. அவர், பொன்மலை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார், நேற்று முன்தினம், வெள்ளைச்சாமியை கைது செய்தனர். மேலும் இந்த சட்டவிரோத திருமணத்துக்கு உதவியாக இருந்த சிறுமியின் தந்தை, தாய், வெள்ளைச்சாமியின் தாய் கருப்பாயி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர். சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டு, காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending