shock

மின்சாரம் தாக்கிய மகனை காப்பாற்றிய தாய் பரிதாபமாக இறந்தார். ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே என்.குமரபாளையத்தை சேர்ந்தவர் கதிரேசன்; விவசாயி. இவரது மனைவி சிவகாமி 35. இவர்களின் மகன் லோகேஷ் பிரசாத் 11.

இவர் நேற்று காலை 10:00 மணிக்கு வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது துணி காய வைக்கும் கம்பியை பிடித்து விளையாடினார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

மகன் அலறல் கேட்டு ஓடி வந்த சிவகாமி கம்பியை பிடித்து இழுத்தார். அவரையும் மின்சாரம் தாக்கியது. அதேநேரம் சிறுவன் சில அடி துாரம் தள்ளி விழுந்தார். இருவரின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

சிவகாமி அதே இடத்தில் இறந்தார். லோகேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending