சுபாஷிதம்: ஒவ்வொரு கணமும் தனமே!

Published:

subhashitam_107
subhashitam_107

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்!
108 ஞான முத்துக்கள்!தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

108. ஒவ்வொரு கணமும் தனமே! 

ஸ்லோகம்:

க்ஷணஸ: கணசஸ்சைவ வித்யாமர்தம் ச சாதயேத் |
க்ஷணத்யாகே குதோ வித்யா கணத்யாகே குதோ தனம் ||
– ஹிதோபதேசம்.

பொருள்:

கல்வி கற்க விரும்புபவர்கள் ஒவ்வொரு கணமும் மதிப்பு வாய்ந்தது என்று அறிய வேண்டும். பணம் சம்பாதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் ஒவ்வொரு பைசாவும் மதிப்பு வாய்ந்ததாக கொண்டு வீண் செலவு செய்யாமல் சேமிக்கவேண்டும். ஒரு கண நேரம்தானே என்று வீணடித்தால் படிப்பு எப்படி வரும்? ஒரு பைசாதானே என்று வீண் செலவு செய்தால் பணம் எப்படித் தங்கும்? 

விளக்கம்:

வீணடித்த காலம் திரும்ப வராது. ஒரு காசைக் கூட வீணாகத் தொலைக்கக் கூடாது. கிரிக்கெட், சாட்டிங் என்று காலத்தைப் போக்கும் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் சுலோகம் இது.

நேரத்தையும் பணத்தையும் பொருட்படுத்தாத மனநிலையை எச்சரிக்கும் ஸ்லோகம் இது. நேரத்தையும் செல்வத்தையும் மதிப்பை அறிந்து பாதுகாக்க வேண்டும் என்று போதிக்கிறது இந்த ஸ்லோகம்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

பல துளி பெருவெள்ளம் என்ற பழமொழியைப் போல அட்சர அட்சரமாகச் சேர்ந்து அட்சயமாக ஞானம் மலர்கிறது. பைசா  பைசாவாகச் சேர்ந்து பெருஞ்செல்வம் சேர்கிறது.

ஒலிம்பிக் ஓட்டப் பந்தயங்களில் பங்கு பெறுபவர்களுக்கு விநாடியின் மதிப்பு தெரியும். நிரந்தரம் சுழன்று கொண்டிருக்கும் பூமித்தாய்க்கு நானோ செகண்ட் மதிப்பு தெரியும்.

மொபைல் போனைக் கையில் பிடித்து மணிக்கணக்காக பொழுதுபோக்கும் மாணவர்களை எச்சரிக்கை செய்கிறது இந்த ஸ்லோகம்.

அனாவசிய செலவுகளைக் குறைத்து செல்வம் சேர்! தானம் செய்! வீண் பொழுது போக்காமல் ஞானம் பெறும் வழியைப் பார்! பிறருக்கு பகிர்! என்பது ரிஷிகளின் உத்தரவு.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img