புதுக்கோட்டையில் சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் உள்ள சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் உள்ளனர். இவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் செல்போன் பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் புதுக்கோட்டை டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது சிறைக்கைதிகளிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் செல்போன்கள் போன்ற பொருட்கள் உள்ளனவா என சோதனை செய்யப்பட்டது .

இருப்பினும், கைதிகளிலிருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending