IMG 20170906 WA0023 - 2026

ஆஸ்திரேலியாவில், ஆட்டுக்குட்டி இறைச்சி விற்பனையை அதிகரிக்க உருவாக்கப்பட்ட
விளம்பரத்தில், விநாயகர் படம்இடம் பெற்று இருப்பது இந்துக்களிடம் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் இறைச்சி, கால்நடை ஆய்வுகள் மற்றும் அதை சந்தையில் ஊக்குவிக்கும் நிறுவனமான ஆஸ்திரேலிய இறைச்சி மற்றும் கால்நடை (MLA) சர்ச்சைக்குரிய ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதில், ஒரு பொது வெளி விருந்து நடக்கும் டேபிளில் விநாயகர், ஜீசஸ், புத்தர் போன்ற வேடங்கள் அணிந்த நபர்கள் உட்பட பலர் உட்கார்ந்துள்ளனர். அவர்கள் ஆட்டுக்குட்டி இறைச்சியின் பெருமையைப் பேசி விளம்பரம் செய்வது போலவும், உட்கார்ந்திருக்கும் சிலர் சாப்பிடுவது போலவும் விளம்பரத்தில் உள்ளது.

தொடர்ந்து, ஆட்டுக்குட்டி இறைச்சி எல்லோரும் சாப்பிடக்கூடிய உணவு என விளம்பரத்தில் கூறுகிறார்கள். இந்த விளம்பரத்தைக் கண்டதும் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்து சமுதாயத்தினர் கொந்தளித்துவிட்டனர். சர்ச்சைக்குரிய இந்த விளம்பரத்தை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், MLA நிறுவனத்தின் மேலாளர் ஆண்ட்ரூ ஹோவி, உங்கள் நம்பிக்கை, பின்னணி எல்லாவற்றையும் மீறி ஆட்டுக்குட்டி உங்களை ஒன்றிணைக்கும் என விளம்பரத்தில் கூறியுள்ளோம். நவீன ஆஸ்திரேலியாவின் மத நம்பிக்கைகள், பின்னணி மற்றும் உணவுத் தேவை ஆகியன குறித்த பன்முகத்தன்மையை முன்னிலைப்படுத்துவதையே விளம்பரத்தில் காட்டப்பட்டுள்ளோம்” என்று சப்பைக் கட்டு கட்டினார். ஆனால் இதற்கு சமூகவலைதளங்களில் மக்கள் பலர் விளம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டுள்ளனர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending