காபுல்: தெற்கு ஆப்கானிஸ்தானில் பஸ் பயணிகள் 13 பேரை பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை இன்று காலை சுட்டுக் கொன்றனர். நாட்டின் அப்பாவி மக்களைக் குறிபார்த்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர் காபூலுக்கு அருகே வார்தாக் மாகாணத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி, வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் இந்தத் தாக்குதல் காபூலுக்கு அருகிலேயே நடந்துள்ளது, அதன் பாதுகாப்பு குறித்த கவலையினை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2016க்குள் ஆப்கனில் உள்ள 10 ஆயிரம் அமெரிக்க ராணுவத் துருப்புகளை திருப்பி அனுப்பும் முயற்சியில் முட்டுக்கட்டை போடுவதாக இது அமையக்கூடும் என்று கருதப் படுகிறது. இருப்பினும் இந்த வருட டிசம்பருக்குள் 10 ஆயிரம் துருப்புகளை 5,500ஆகக் குறைக்க அமெரிக்கா முயற்சி எடுத்துள்ளது. இதுகுறித்து வார்தாக் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் அடாவுல்லா கோக்யானி கூறியபோது, காந்தஹார் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் மீது அதிகாலை 1 மணியளவில் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒரு பெண் உள்பட 13 பேர் உயிரிழந்தனர் என்றார். கஜினி மாகாண துணை ஆளுநரோ, பஸ்ஸில் இருந்து பயணிகளை கீழே இறக்கிவிட்டு, அவர்களை ஒவ்வொருவராக பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அப்பாவி பஸ் பயணிகள் 13 பேர் சுட்டுக் கொலை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari