தினமும் ஒரு காதல் கெஞ்சல் வீடியோ: 365வது நாளில் காதலியிடம் காட்டி “கணக்கு பண்ணிய” காதலன்!

Published:

marriage-proposalடீன் ஸ்மித். ஒவ்வொரு நாளும் ஒரு காதல் அறிவிப்பு வீடியோவை எடுத்துவைத்தார் தனது காதலி ஜெனீஃபர் கெஸெலுக்காக. அந்த வீடியோவில், ஒவ்வொரு நாளும், தன் காதலியைப் பற்றிச் சொல்லி, தான் அவளைக் காதலிக்கும் விதத்தைச் சொல்லி, நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்டு ஒரு வெள்ளை அட்டையை அந்த வீடியோ முன் காட்டி பதிவு செய்து வைத்தார். தனது எஞ்சிய வாழ்நாளை எல்லாம் ஒட்டு மொத்தமாக அவளுடனேயே கழிக்க விரும்புவதாக காதல் செய்தி அதில் சொன்னார். ஒவ்வொரு நாளும் ஒரு செய்தியாக எழுதி, என்னை மணந்து கொள்வாயா என்று கேட்டு 365 நாளையும் ஓட்டி அதை ஒட்டுமொத்த ஒரு வீடியோ ஆக்கினார். தான் பல் துலக்கும்போதும், நாயுடன் கொஞ்சும்போதும், துணிகளை மெஷினில் துவைக்கும்போதும் என அவருடைய அன்றாடப் பணிகளை எல்லாம் அந்த வீடியோவில் பதிவு செய்தார். அந்த வீடியோக் காட்சியின் கடைசியில் இப்போது நீ திரும்பிப் பார் என முடித்து வைத்தார். அன்று கெஸெலின் பிறந்த நாள். டீன் ஸ்மித்தும் ஜெனிஃபரும் நீண்டகாலம் பழகி வந்திருந்தனர். ஆனாலும், அவருக்கு என்னவோ ஒரு ஆண்டாகக் காதல் கிளர்ந்தெழுந்தது. ஆனால் அதை உடனே கேட்டுவிட அவருக்கு மனதில்லை. ஓர் ஆண்டு தினமும் அவரை தன் முன் நிற்பது போல் நினைத்து கற்பனை செய்து கொண்டு, காதலை வெளிப்படுத்தி தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்க முடிவு செய்தார். அதன்படி ஒவ்வொரு நாளும் “நீ என்னை மணந்து கொள்வாயா? உன்னுடன் இறுதிவரை வாழ விரும்புகிறேன்” என்பது போன்ற வாசகங்களை அட்டையில் அன்றைய தேதியுடன் எழுதி வீடியோவாக பதிவு செய்து கொண்டே வந்தார். 365 நாட்களுக்கும் இது ரகசியமாகத் தொடர்ந்தது. அன்று ஜெனிஃபரின் பிறந்த நாள். அந்த வீடியோவை ஜெனிஃபர் கடற்கரையில் தனியாக அமர்ந்து பார்க்கும்படி செய்தார் ஸ்மித். அப்படி அவர் பார்த்து முடித்த பின்னர், அவருக்குப் பின்னால் அட்டையில், “என்னை மணந்து கொள் என்ற வாசகத்துடன் ஸ்மித் தயாராக நின்று கொண்டிருந்தார். ஸ்மித்தின் வீடியோ ப்ரொபோசலைப் பார்த்து முடித்ததும், ஜெனிஃபருக்கு உணர்ச்சி பொங்கியது. காதல் வசப்பட்ட நிலையில் அந்த வீடியோவில் ஸ்மித் சொன்னபடி திரும்பிப் பார்த்தவருக்கு, அங்கே ஸ்மித் கடற்கரை மணலில் நின்றிருந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவர் அருகில் சென்றார் ஜெனிஃபர். ஸ்மித் கடற்கரை மணலில் மண்டியிட்டு தனது காதலைச் சொன்னார். அடுத்த கணமே ஜெனிபர் கண்கள் கலங்கின. அவரின் தந்தை, வளர்ப்புத் தாய் என கூடியிருந்த நட்பு வட்டம் கைத்தட்டி வாழ்த்து சொன்னது. இந்த வீடியோ முறை மேரேஜ் ப்ரொபோசல் – இந்த 2015ம் ஆண்டின் மிகச் சிறந்த மேரேஜ் ப்ரோபோசல் என்ற பெயரை வாங்கியிருக்கிறது. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=ECRqF4BHkGk”]

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Related articles

Recent articles

spot_img