சைவ உணவு வகையை நிறுத்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் முடிவு

துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமான நிறுவனம் சைவ உணவு வழங்குவதை நிறுத்த முடிவு உள்ளது. எமிரேட்ஸ் விமான நிறுவனம் பல்வேறு வகை உணவுகளுடன், இந்தியப் பயணிகளின் வசதிக்காக சைவ உணவையும் வழங்கி வந்தது. இந்நிலையில் எமிரேட்ஸ் நிறுவனம் இந்து மீல் உணவு வகையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

சைவ உணவை விரும்புபவர்கள் ஜைனர்களுக்கான சைவ உணவு, இந்திய சைவ உணவு, கோசர் மீல்ஸ் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. ஏர் இந்தியா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவை ரிலீஜியஸ் என்கிற பெயரில் சைவ உணவை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.