இந்தியப் பொருட்கள் மீது வரி விதிப்பை தவிர்ப்பதற்காக, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவுக்கே முதன்மை என்ற வர்த்தகக் கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப், பிற நாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி விதிக்கப்படாத நிலையில், அந்த நாடுகளோ அமெரிக்கப் பொருட்கள் மீது 100 சதவீதம் வரை வரி விதிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்.
அத்தகைய நாடுகள் கடந்த காலங்களில் அமெரிக்காவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். அப்போது இந்தியாவுடன் நல்ல உறவு இருப்பதாக சுட்டிக்காட்டி பேசிய அவர், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிப்பதை அந்நாடு விரும்பவில்லை என்று குறிப்பிட்டார்.
இதற்காக, இந்தியா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இத்தகைய ஒப்பந்தத்தை வேறு யாருடனும் செய்து கொள்ள இந்தியா விரும்பியதில்லை என்றும் அமெரிக்க அதிபர் கூறினார்.