இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்றும், தமது அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் என்று அறிவித்துள்ள அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ராஜபக்சே பிரதமராகப் பதவியேற்றது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது.