விடுதலைப் புலிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தொடர்பில்லை: சுமந்திரன்

Sumanthiran MPவிடுதலைப் புலிகளுடன் எங்களுக்குத் தொடர்பில்லை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சுமந்திரன் கூறியுள்ளார். இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சுமந்திரன் இது குறித்துக் கூறிய போது, ”விடுதலைப் புலிகளுடனோ, அவர்களது கொள்கைகளுடனோ எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. தமிழர்களின் உரிமைகளுக்காகவே நாங்கள் போராடி வருகிறோம். ஆனால், நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை, ஊக்குவிப்பதும் இல்லை. இது அனைவருக்கும் தெரியும். விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும் என்ற வருத்தம் யாருக்கும் தேவையில்லை. மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சில கட்சிகள் செய்யும் முயற்சி இது. ஆனாலும் அப்படி ஒரு நடவடிக்கை இருந்தாலும் அதனை மக்கள் ஆதரிக்கவோ அனுமதிக்கவோ மாட்டார்கள்” என்று கூறினார்.