குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு வகைகளை போலீசார் கையாண்டு வரும் நிலையில், திருடனை பிடிக்க ஆடையின்றி சென்ற பெண் அதிகாரி ஒருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவில் இல்லை, சுவிடனில் நடந்துள்ளது. சுவிடனை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி நீராவி குளியலுக்காக சென்ற போது, அங்கு போலீசாரால் தேடப்படும் குற்றவாளி ஒருவர் இருப்பதை தெரிந்து கொண்டு, அந்த நிலையிலேயே சென்று கைது செய்துள்ளனர். பெண் போலீஸ் அதிகாரியின் செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.