samai rippan pakota
samai rippan pakota

சாமை ரிப்பன் பக்கோடா

தேவையான பொருட்கள்:
சாமை, புழுங்கலரிசி – தலா 250 கிராம், பொட்டுக்கடலை – 200 கிராம், வெண்ணெய் – 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

சாமை, புழுங்கலரிசி இரண்டையும் இரண்டு மணி நேரம் ஒன்றாக ஊறவைத்துக் களைந்து கிரைண்டரில் மையாக அரைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்துச் சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

இதனுடன் அரைத்த சாமை மாவுக் கலவையைச் சேர்க்கவும். பிறகு மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், சீரகம், வெண்ணெய் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து மாவை முறுக்கு மாவுப் பதத்துக்கு நன்கு பிசையவும். பின்னர் மாவை ரிப்பன் பக்கோடா அச்சில் நிரப்பி, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

குறிப்பு: வரகு, குதிரைவாலியிலும் இதேபோல் பக்கோடா செய்யலாம்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending