ஒருவருடைய தனிப்பட்ட ஜாதகத்தில் ராகுவின் நிலையை கொண்டு அவரின் வாழ்க்கையில் ராகுவினால் வரும் துன்பங்கள் நிர்ணயிக்க படுகிறது. அதைப் போலவே திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கும் பொழுதும் ராகு எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்த்துக் குறிக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு ஜோதிடர் ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்கு நாள் நிச்சயதார்த்த நாள் எல்லாம் குறித்து கொடுக்கிறார். அது ராகுவின் ஆதிக்கம் உள்ள நாள் நேரம் ஆகும். ஆகையால், ராகுவுக்குப் ப்ரீதி செய்துவிட்டால் திருமணத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று சொல்கிறார். பெண் வீட்டுக்காரர்களும் அதைப் போலச் செய்கின்றனர். ஆனால், திருமணமான சில மாதங்களில் கணவனை பிரிகிறாள்.
இன்னொருவருக்கு திருமண முகூர்த்த லக்னம் ஜாதகம் கால சர்ப யோகம் ராகு கேதுவுக்குள் அனைத்தும் அடக்கம். அவருடைய திருமண வாழ்க்கையில் அடிக்கடி மனைவியை பிரிந்து வாழ்ந்தார் சுகமான வாழ்க்கை இல்லை வெகு சுமார்தான். ஜோதிடர் எப்படி அப்படி ஒரு முகூர்த்தத்தை கொடுத்தார்?
இதெல்லாம் ராகுவின் செயல் ஆகும்.
ஒருவரது ஜாதகத்தில் ராகுவின் ஆதிக்கம் 7 லக்னம், 2 சம்பந்தப்பட்டால் திருமணம் குடும்பம் இவை சுமாராக இருந்து கணவன் மனைவிக்குள் அதிக நெருக்கம் இருக்காது. அதைப் போலவே திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கும்போதும், முகூர்த்த லக்னத்திற்கு மேற்கண்ட வகையில் ராகுவின் ஆதிக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
ராகு கேது இரண்டும் சாயா கிரகம் என்பார்கள். அவை நிழல் போன்றவை. அவை எங்கு இருக்கிறதோ அந்த இடத்தை அவை தெளிவற்றதாக்கி விடும். ஆகவே, ஒருவருடைய ஜாதகத்தை அலசும் போது ராகுவின் பங்கை அதிகம் கவணிப்பது அவசியம். அதை கொண்டு தான் திருமண வாழ்க்கையை பற்றி சரியாக சொல்ல முடியும். அதைப் போலவே திருமண முகூர்த்தத்தைக் குறிக்கும்போதும் இது அவசியம்.
ஜோதிடர் லக்ஷ்மி ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG , II Block, Alsa Green park, Near MIT Gate
Nehru Nagar, Chrompet, Chennai – 600 044
Email: [email protected]
Phone: 044-22230808 / 8056207965