raghu kethu - 2026

ராகு லக்னத்திலோ, 7லோ , அல்லது 2லோ, 8லோ ராகு இருந்தால் அதே போல ஜாதகங்களை தான் பொருத்தமாய் சேர்க்கனும் என்பது சில ஜோதிடர்கள் கருத்து.

ஆனால் உண்மையில் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் லக்னத்தில் அல்லது 7,8,2 ல் இருக்கும் ராகுவின் நிலை என்ன என்பதை தீர்மானித்து அது இருக்கும் நக்ஷத்திராதிபதி யார் என கண்டு அவர் பலம் அறிந்து ஜாதகங்களை இணைக்க வேண்டும்.

பொதுவா ராகுவுக்கு சுய பலம் கிடையாது எந்த ராசியில் இருக்கிறதோ எந்த நக்ஷத்திர கால்களில் இருக்கிறாதோ அந்த அதிபதியின் பலத்தை கொண்டிருக்கும்.

ஒருவருக்கு ராகு 8ல் இருக்கு அந்த எட்டாம் இடம் ராகுவுக்கு பகை அல்லது நீசம் இப்படி இருந்தால் ராகு பலம் இழந்து போகிறது அதனால் ராகுவினால் கெடுதல் இல்லை வரனின் ஜாதகத்திலும் ராகு 8ல் அல்லது 2ல் இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.

ஆகவே வரன் தேடும்போது இதை மனதில் கொண்டு ராகு பலம் அறிந்து பொருத்தம் சேர்ப்பது நன்று.

ராகு -கேதுக்களுக்கு உபயராசிகள் மிதுனம் கன்னி தனுர் மீனம் நட்பு ராசிகள், விருச்சிகம் உச்சம் ரிஷபம் நீசம், (சிலர் கடகம் நீசம் என்பர்) மற்றவை பகை.

ஆலோசனை: ஜோதிடர் ரவி சாரங்கன் @ லக்ஷ்மி நரசிம்மன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending