பிக்பாஸ் சீசன் 3.. யார் வெற்றியாளர்? பாலாஜிஹாசனின் சர்ச்சை!

Published:

balaji hassan e1563699893905 - 2026

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. என்னை முடித்து கட்ட வேண்டும் என்று சிலர், குறிப்பாக என்னுடைய துறை சார்ந்தவர்களே போட்டி பொறாமையுடன் வதந்திகளை பரப்புகிறார்கள் என்று ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார்.

அண்மை காலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பல்வேறு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. யார் என்ன செய்தார்கள், என்ன சொன்னார்கள் என்று ஒரு பரபரப்பை ஏற்படுத்தி மக்களின் மனதில் இதை போராட்டமாகவே இது கருதப்படுகிறது.

biggboss - 2026

இது ஒரு புறம் இருக்க, சேலம் ஜோசியர் பாலாஜி ஹாசன் பிக் பாஸ் வெற்றியாளர் யார் என்பதை கணித்து கூறியதாக பல ஊடங்களிலும், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற இணையதளங்களிலும் பரவலாக செய்தி வந்தது.

ஆனால் அவருடைய தரப்பிலிருந்து வந்த செய்தியோ, என்னை ஒரு வழியாக முடித்து கட்ட வேண்டும் என்று சிலர், குறிப்பாக என்னுடைய துறை சார்ந்தவர்களே சின்ன பையன் வளர கூடாது என்று கடுமையான போட்டி பொறாமையுடனும் வதந்திகளை பரப்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.

விஜய் டிவி நடத்தி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என நான் எந்த கணிப்பும் வெளியிடவில்லை. நான் சொன்னதாக ஊடகங்களில் வெளியாவது அனைத்தும் அந்தந்த ஊடகங்களின் கற்பனையே.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

நான் எந்த செய்தி வெளியிட்டாலும் வீடியோவுடன் மட்டுமே வெளியிடுவேன். எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் ஜெயிப்பார் அவர் ஜெயிப்பார் என நான் சொன்னதாக வரும் அனைத்து செய்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பற்றி எனக்கு ஏதும் தெரியாது. அப்படி இருக்கையில் அந்த போட்டியில் பங்கு பெற்றிருக்கும் போட்டியாளர்கள் பற்றியோ அவர்களின் ஜாதகமோ என்னிடம் இல்லாத போது அந்த நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெறுவார், அவர் வெற்றி பெறுவார் என்று நான் எப்படி கணிக்கமுடியும்.

எந்த ஒரு கணிப்பாக இருந்தாலும் அதை வீடியோ மூலமாகவே பதிவு செய்வேன். எழுத்து வடிவமாகவோ அல்லது வேறு வடிவிலோ என்னுடைய கணிப்பு என்று வெளியிடப்பட்டால் அது நிச்சயமாக அது தவறான தகவலே ஆகும். முகநூல் அல்லது யூடியுப்பில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை தாராளமாக யார் வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம் அதனால் எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

Related articles

Recent articles

spot_img