கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, பிளாஸ்மா தெரப்பி சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட ஹிந்தி நடிகை மொரானி, ரத்த பிளாஸ்மாவை, தானமாக வழங்கினார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிப்பவர், ஜோ மொரானி. ஹிந்தி திரைப்பட நடிகையான இவரும், இவரது சகோதரி ஷாஜா, தந்தையும், திரைப்பட தயாரிப்பாளருமான கரீப் மொரானி ஆகியோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
கடந்த மாதம், மூவரும் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, பிளாஸ்மா தெரப்பி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு பயன்படும் வகையில், ஜோ மொரானி, ரத்த பிளாஸ்மாவை, தானமாக வழங்கினார்.