படத்தின் ஷூட்டிங்குக்கு அஜித்தும், அஜித் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்குக்கு விஜய்யும் அவ்வப்போது விசிட்
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நண்பர் அஜித் என நடிகர் விஜய் பேசியதில் இருந்தே தல – தளபதி காம்பினேஷுனுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
சமீபத்தில், உலகநாயகன் கமல்ஹாசனை நடிகர் விஜய்சேதுபதி இன்ஸ்டாகிராம் லைவ்வில் கலந்துரையாடி பல கேள்விகளையும் கேட்டது மிகப்பெரிய அளவில் வைரலானது. மேலும், சில சர்ச்சைகளையும் கூடவே கொண்டு வந்து சேர்த்து இருக்கிறது.
தல – தளபதி எனும் சூப்பர் காம்பினேஷனை தற்போது தமிழ்நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், இதனை முதலும் கடைசியுமாக சாத்தியப்படுத்தியவர் இயக்குநர் ஜானகி செளந்தர் தான். அவர் இயக்கிய ராஜாவின் பார்வையிலே படத்தில் தான் அஜித் – விஜய் முதலும் கடைசியுமாக இணைந்து நடித்துள்ளனர்.
சினிமாவில் தொடர்ந்து நடிக்காமல் ஆளுக்கொரு மாஸ் பாதையை பிடித்துக் கொண்டு கோலிவுட்டின் இரு பெரும் கலெக்ஷன் மன்னன்களாக மாறியிருந்தாலும், அவர்களுக்கு இடையே ஆரம்பத்தில் இருந்தே அப்படியொரு நட்பு இன்னமும் தொடர்ந்து வருகிறது. குடும்ப விழாக்கள் உள்ளிட்ட பல விஷேச நிகழ்ச்சிகளில் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ளும் அளவுக்கு நட்பாக பழகி வருகின்றனர்.
விஜய் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்குக்கு அஜித்தும், அஜித் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்குக்கு விஜய்யும் அவ்வப்போது விசிட் அடித்துள்ளனர். அதன் புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன. சமீபத்தில் கூட மங்காத்தா படத்தின் ஷூட்டிங்கின் போது தளபதி விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து தல அஜித்தை சந்தித்த புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்திருந்தார்.
அவெஞ்சர்ஸ் நடிகர்கள் முதல் உலகநாயகன் கமல் வரை இன்ஸ்டாகிராம் லைவ்வில் நேரடியாக பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டு, மக்களை இந்த லாக்டவுன் நேரத்தில் மகிழ்வித்து வருகின்றனர். சமீபத்தில், கமல்ஹாசன் – விஜய்சேதுபதி இணைந்து நடத்திய இன்ஸ்டா லைவ்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் – விஜய்சேதுபதி இன்ஸ்டா லைவை தொடர்ந்து தல அஜித் மற்றும் தளபதி விஜய் இப்படி ஒரு இன்ஸ்டா லைவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. அதுவும் சோனி மியூசிக்கல் நிறுவனம் அந்த எதிர்பார்ப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட, தல – தளபதி ரசிகர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதுவும் தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி இந்த இன்ஸ்டா லைவ் ஒருவேளை நடைபெற்று, நடிகர் அஜித் விஜயை வாயாற நண்பர் விஜய்க்கு ஹேப்பி பர்த்டே என வாழ்த்து சொன்னால், ஒட்டுமொத்த விஜய் – அஜித் ரசிகர்களும், அப்புறம் காலத்துக்கும் நண்பர்களாக மாறினாலும் மாறிவிடுவார்கள். ஆனால், இதெல்லாம் நடக்கணுமே பாஸ்!