கேமராவில் ஸூம் செய்து பார்த்த போது அவர் அழுதது தெரியவந்ததாம்
ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான கண்டுகொண்டுடேன் கண்டுகொண்டேன் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை படக்குழுவினர், ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் போது நிகழ்ந்த முக்கியமான சம்பவத்தை இயக்குநர் ராஜீவ் மேனன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதாவது படத்தில் சந்தன தென்றலை பாடல் ஷூட்டங்கின் போது அஜித் முகத்தை கேமராவில் ஸூம் செய்து பார்த்த போது அவர் அழுதது தெரியவந்ததாம்.
பதற்றமடைந்த இயக்குநர், அஜித்திடம் எதற்காக அழுகிறீர்கள், தூசு எதுவும் பட்டுவிட்டதா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அஜித், மிக கடுமையான முதுகு வலி உள்ளது என்றும், ஆனாலும் பரவாயில்லை அடுத்த ரயில் வருவதற்கு முன் இந்த ஷாட்டை எடுத்துவிடுவோம் என கூறியதாக ராஜூவ் மேனன் கூறியுள்ளார்