
லால் ரங்க், ஜில்லா காஸியாபாத், படாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால், பிரபலங்கள் பலர் எளிமையாக தங்கள் திருமணத்தை நடத்தி வருகிறார்கள்
பிரபல இந்தி நடிகர் அஷுதோஷ் கவுசிக், தனது திருமணத்தை வீட்டு மொட்டை மாடியில் நடத்தி உள்ளார். இவர் லால் ரங்க், ஜில்லா காஸியாபாத், படாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெற்றிகரமாக ஓடிய திருட்டுப் பயலே படத்தின் இந்தி ரீமேக்கான ஷார்ட் கட் ரோமியோ படத்திலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.
அஷுதோஷ் கவுசிக்கும், அர்பிதா என்பவரும் காதலித்து வந்தனர். திருமணமும் முடிவானது. கொரோனா ஊரடங்கில் திருமணத்தை தள்ளி வைக்க விரும்பாமல் நிச்சயித்த தேதியிலேயே நொய்டாவில் உள்ள தனது வீட்டு மொட்டை மாடியில் நெருங்கிய உறவினர்கள் சிலரை மட்டும் வைத்துக்கொண்டு மணமகளுக்கு தாலி கட்டினார்.