திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் தயாரிப்பாளராக முடியும்.
அண்மைக்காலமாக தமிழ் சினிமாவை முடக்கிப்போட்ட கொரோனா பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க பலர் களத்தில் இறங்கியுள்ளனர் . அதன் ஒரு பகுதியாக பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளார் .
ரூ.2 கோடி பொருட்செலவில் புதிய படம் ஒன்றை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்திற்கு மொத்தம் 200 தயாரிப்பாளர்கள். ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் தயாரிப்பாளராக முடியும்.
இந்த படத்தின் வியாபாரத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பங்கு பிரித்து கொடுக்கப்படும்.
அதிலும் இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.
சத்யராஜ் தலைமை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அவருடன் பார்த்திபனும் இணைந்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் எல்லாவருக்கும் வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இவை அனைத்தும் சரியாக வங்கி பரிவர்த்தனை மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும்.