எங்களுடன் செல்பி எடுத்து அவருக்கு அனுப்புவார்.

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர்பால் திருமணம் கொரோனா பரபரப்பையும் மீறி ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் துணை இயக்குனர் ஒருவர் பீட்டர்பால் குறித்து தனது முகநூலில் பதிவு செய்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வேறொரு பெண்ணை தனது மனைவி என்று அறிமுகம் செய்ததாக அந்த துணை இயக்குனர் கூறியுள்ளார். அவர் தனது முகநூலில் இதுகுறித்து கூறியதாவது:

73ee37a0bda2f9e259b36084613d1bc8 - 2026

ஒரு திரைப்படத்தின் கலந்துரையாடலின்போது பீட்டர்பாலுக்கு அடிக்கடி போன் வந்தது. பீட்டர்பால் அது தனது மனைவி என்றும், அவரும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் கூறினார். மேலும் எங்களுடன் செல்பி எடுத்து அவருக்கு அனுப்புவார். நாங்கள் ஆர்வமிகுதியால் அவர் யார் என்று கேட்டோம். கடைசியில் ஒரு நாள் அவர் ஒரு புகைப்படத்தை காண்பித்து ‘இவர் தான் எனது மனைவி’ என்று கூறினார். ஆனால் இன்று பீட்டர்பாலுக்கு எதிராக போராடும் பெண் அந்த நபர் அல்ல’ என்று துணை இயக்குனர் கூறியுள்ளார்.

 efdfcf81a1ee3fa653b93893f4261582 - 2026
துணை இயக்குனரின் இந்த பதிவை வைத்து பார்க்கும்போது பீட்டர்பால் தனது மனைவி என்று புகைப்படத்தை காண்பித்தது யார் என்ற கேள்வி எழுகிறது. துணை இயக்குனரின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending