
சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு சென்றவர் ரோபோ சங்கர். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து வருகிறார். இவரின் மகள் இந்திரஜா சங்கர். பிகில் படத்தில் விஜய் டீமில் கால்பந்து வீரங்கனையாக நடித்து ரசிகர்கள் கவர்ந்தவர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு 3வது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக அவர் செல்லவுள்ளது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே மற்ற போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அதே ஹோட்டலில் இந்திரஜா தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே டிவி தொகுப்பாளினி அர்ச்சனா மற்றும் ரேடியோ ஜாக்கி சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே சென்றது குறிப்பிடத்தக்கது.