
மனுஷ்மிருதி புத்தகத்தில் குறிப்பிட்ட சாதியை உயர்த்தியும் மற்ற சாதியினரை இழிவாக சித்தரிப்பதாகவும், குறிப்பாக பெண்களை மிகவும் மோசமாக சித்தரித்திருப்பதாகவும் சமீபத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பரபரப்பு புகாரை கூறினார். போராட்டமும் நடத்தப்பட்டது.
இதையடுத்து திருமாவிற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்வினை ஆற்றப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பாஜகவின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திருமாவளவனை கடுமையாக விமர்சித்தனர். ஆனாலும், திருமாவளவன் தனது கருத்தில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய கமல்ஹாசன் ‘மனுஷ்மிரிதி வழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம். அதை பற்றி பேசுவது தேவையில்லாதது என் கருத்து. அரசியலமைப்பு புத்தகம் மீது கை வைத்தால் நான் வருவேன். ஆனால், மனுஷ்மிரிதி பற்றி விவாதிப்பது தேவையற்றது’ என அவர் கூறினார்.
ஆனால், 2019ம் ஆண்டு தனது டிவிட்டர் பக்கத்தில் மருதநாயகம் படத்திற்காக அவர் எழுதிய பாடலை பகிர்ந்திருந்தார்.
அதில் ‘மதங்கொண்டு வந்தது சாதி.. இன்றும் மனதைத் துரத்துது மனு சொன்ன நீதி..’ என்கிற வரியை பதிவிட்டிருந்தார்.
மருதநாயகத்தில் அப்படி பாடல் எழுதிய கமல்ஹாசன் தற்போது மனுஷ்மிரிதி பற்றி பேச தேவையில்லை என கூறியிருப்பது அரசியல் நோக்கம் என நெட்டிசன்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
அன்று சில்லறைகளை சிதறவிட்டோம்
இன்று சில்லறைக்காக சிதறிவிட்டார்! #BurnManuSmriti https://t.co/7wQqFv0ds9— இசை (@isai_) November 5, 2020