தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நயன் தாரா. அடுத்த படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகியில் நடித்தார். அதன்பின் மெல்ல மெல்ல வளர்ந்து முன்னணி நடிகையானார். அப்போதுதான், வல்லவன் படத்தில் நடித்த பொது சிம்புவடன் காதல் ஏற்பட்டது. ஆனால், அந்த காதல் முறிந்து போனது.
அதன்பின் விஜய்க்கு ஜோடியாக வில்லு படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகருமான பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டு திருமணம் வரை சென்றது. ஆனால், அந்த காதலும் அவருக்கு கை கூடாமால் பிரபுதேவை பிரிந்தார்.
அதுபற்றி ஒரு பேட்டியல் பேசியுள்ள நயன்தாரா ‘நம்பிக்கை இல்லாத காதல் நிலைக்காது. நம்பிக்கை இல்லாத நபருடன் சேர்ந்து வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல் என என் பழைய காதல்களை நான் கடந்து விட்டேன்’ எனக் கூறியுள்ளார்.
நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டு இருவரும் தற்போது நெருக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Source: Vellithirai News