தற்போது பிக்பாஸ் சீசன் 4 நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசன் வந்து வீட்டின் பஞ்சாயத்துக்களை தீர்த்து வைக்கிறார். நன்றாக விளையாடிய போட்டியாளரை பாராட்டியும் வருகிறார்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் ஆரியுடன் எல்லோரும் சண்டை போடுகின்றனர். அவர் மிகவும் நியாயமாக பேசுவது யாருக்கும் பிடிக்கவில்லை. ஒருபக்கம் பாலாஜி சனம் ஷெட்டியுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகிறார். அழகி பட்டம் பெற்றது பற்றி தன்னை பாலாஜி தவறாக விமர்சித்ததாக சனம் ஷெட்டி புகார் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த வாரம் பாலாஜிக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்படவுள்ளார் என பரவலாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.